கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார்... அதிமுகவுக்கு சபாம் விட்ட எல்.கே.சுதீஷ்..!

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 1:49 PM IST
Highlights

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. ஆனால், அதிமுக தரப்பில் வெறும் 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். 3 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ்;- அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் தலைவர் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளார். 

தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுகவுக்கு வேலை பார்க்கவில்லை. பாமகவுக்கு ஸ்லீப்பர் செல்லாக வேலை பார்த்து வருகிறார் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

click me!