#BREAKING அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்... விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு..!

Published : Mar 09, 2021, 01:30 PM ISTUpdated : Mar 09, 2021, 01:34 PM IST
#BREAKING அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்...  விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

3 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

3 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 40 சீட்கள் வரை தேமுதிக கேட்ட நிலையில் தற்போது பாமக, பாஜக கட்சிகளுக்கு இணையாக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவை சந்தித்து பேசினார். அப்போது பாமகவிற்கு நிகராக தங்களுக்கு 23 தொகுதிகளாவது வேண்டும் என்று தேமுதிக தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் கொடுக்க முடியும்  என்று எடப்பாடி பழனிசாமி கறாராக கூறிவிட்டார். இதனால், இதனை ஏற்கும் நிலையில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த்  அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினாலும், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்