டி.நகர் சிறையில் சசிகலா... பெங்களூரு சிறையில் இருந்து ரிலீசான பிறகும் நீங்காத சோதனை..!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2021, 12:50 PM IST
Highlights

சுயநலத்தின் வெறியால் எல்லைதாண்டி போய்விட்டார் டி.டி.வி.தினகரன். சசிகலா சட்டப்படி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியில் சகல மரியாதையோடு வந்து விட்டார். ஆனால், தற்போது தி.நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

சுயநலத்தின் வெறியால் எல்லைதாண்டி போய்விட்டார் டி.டி.வி.தினகரன். சசிகலா சட்டப்படி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியில் சகல மரியாதையோடு வந்து விட்டார். ஆனால், தற்போது தி.நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க வேண்டும் எனில் சிறை நிர்வாகத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று சந்திக்க வேண்டும். தற்போது தி. நகரிலும் அதே நிலைதான். சசிகலாவை யார் சந்திக்க விரும்பினாலும் டி.டி.வி.தினகரனிடம் பேசி, அனுமதி பெற்றே சந்திக்க முடியும். சசிகலாவை சந்திக்க அதிமுகவினர் பலரும் தயாராக இருந்த்போதும், அதற்கு தினகரனிடம் பேச வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.  டி.டி.வி.தினகரனை சந்திக்க, பேச விரும்பாத பலரும் சசிகலாவை சந்திக்க முடியாமல் திண்டாடி போயினர் என்பதே உண்மை.

கோடி கோடியாக முதலீடு செய்து கடையை திறந்து போணி செய்ய ஒருவரும் வரவில்லை என்று ஏமாந்துபோன முதலாளி போல் ‘சசிகலா வந்தால் அதிமுகவிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் என்று பலரும் ஓடோடி வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த அமமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு காக்கா குருவி கூட வரவில்லை. மாறாக சீமான், பாரதிராஜா அமீர், உள்ளிட்ட சிலர் வந்து சசிகலாவை சந்தித்து சென்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்தார் டி.டி.வி.தினகரன். 

ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பிறகு கருணாஸ், தனியரசு, சரத்குமார், சீமான், பாரதிராஜா போன்றவர்கள் சசிகலாவை சந்திக்க அணுகியபோது வெறும் நல விசாரிப்பு, ஆதரவு என்பதை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதிமுக -அமமுக இணைப்பு பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் கருணாசுக்கு கூடுதல் நிபந்தனைகளை டி.டி.வி.தினகரன் விதித்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர் சசிகலாவை சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் முக்கியமானது நடிகர் பிரபு குடும்பத்துடன் வந்து சந்தித்தது தான். எப்படியாவது சின்ன எம்.ஜி.ஆர் சுதாகரனை விடுதலை செய்ய வேண்டும். அபராத பணத்தை நானே தருகிறேன் என்று கெஞ்சினாராம் பிரபு. இங்குதான் நிற்கிறார் டி.டி.வி தினகரன். பணத்திற்கு பஞ்சம் இல்லாத குடும்பம் தான் பிறகு ஏன்? இதுவரை சின்ன எம்ஜிஆர் விடுதலையாக்க முடியவில்லை. 

தேர்தல் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் டி.டி.வி.தினகரன். காரணம் நான்தான் அம்மாவின் வளர்ப்பு மகன், வாரிசு என்று அரசியல் போட்டி வரும் என்ற சுயநலம் தான் தினகரன் சொந்த தம்பி சிறையில் வைத்திருக்கிறது. மேலும் சசிகலா சிறைக்குப் போன பிறகு இங்கே நடந்த பிரச்சினைகள் எதுவும் அவரது காதுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்பதே உண்மை. எனவேதான் விடுதலை ஆனது முதல் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி பற்றியோ ஓபிஎஸ் பற்றியோ அமைச்சர்கள் பற்றியோ எதுவும் சசிகலா பேசவில்லை. அதைவிட முக்கியம் அமமுக என்ற கட்சியை அங்கீகரித்தது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதுதான் சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரன் உள்ள பிரச்சினை. இதுவரை சசிகலாவை யாரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முடியவில்லை. 

வரும் தேர்தலில் அமமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யக் கிளம்பி சசிகலா வரவேண்டும். அதன் மூலமாக நாம் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று என்னும் டி.டி.வி. தினகரனின் கனவும் சுக்கு நூறாய் உடைந்து போய் விட்டது. அதிரடியாக சசிகலா அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பு அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை திவாகரன் சசிகலாவை சந்திக்க முடியாமல் தவிர்த்து வருகிறார் டி.டி.வி தினகரன். மேலும் ஜெயலலிதாவுக்கு சசிகலாவை போலவே நிழலாக இருந்த உதவியாளர் பூங்குன்றன் பல்வேறு வழிகளில் முயற்சித்து விசாரிக்கவும் போனில் பேசக்கூட முடியவில்லை என்று வருகிறாராம்.

இதுபோன்ற சூழலில் டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த சிலரிடம் பேசியபோது ’’தமிழகத்தில் நாங்கள் ஒன்றுபட்டு அதிமுகவை கூட்டணியாக விரும்பினோம். ஆனால், மேலிடத்திலிருந்து மிக முக்கிய தலைவர்களின் மனசாட்சியாக இருக்கும் ஒருவர் நேரடியாக சசிகலாவை தொடர்பு கொள்வார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஒரு மணி நேரத்தில் சசிகலா தொடர்பு கொள்வார் என்று உதவியாளர்கள் சொல்லப்பட்டு மூன்று நாட்களாகியும் பதில் வரவில்லை. நல்ல நாள், கெட்ட நாள், பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை என்று காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து விட்டார்கள். மேலும் தினகரன் தரப்பினர் நாக்பூர் தலைமையை தொடர்பு தொடர்பு கொள்ளாமல் வேறு ஏதேதோ தவறான சேனலின் தொடர்பு கொண்டனர். அதனால்தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். எல்லாவற்றிற்கும் காரணம் இந்த டி.டிவி.தினகரன் மட்டுமே என்கிறார்கள். 
 

click me!