தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..? பகீர் கிளப்பும் கருத்துக்கணிப்பு..!

Published : Mar 09, 2021, 12:11 PM IST
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..? பகீர் கிளப்பும் கருத்துக்கணிப்பு..!

சுருக்கம்

இரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் தமக்கு வாழ்வா? சாவா? என்கிற போராட்டத்தில் இருக்கின்றன. 

தமிழகத்தில் பெரும் ஆளுமைகளான மறந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா- கருணாநிதி ஆகியோர் மறைந்து விட்ட நிலையில் முதல் சட்டமன்றத் தேர்தலை அதிமுகவும், திமுகவும் எதிர்க்கொள்ள இருக்கின்றன. பெரும் பிரளயங்களுக்கிடைடே இரு கட்சிகளும் சரிசம போட்டி வகித்து வருகின்றன. இரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் தமக்கு வாழ்வா? சாவா? என்கிற போராட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் டைம்ஸ்நவ் - சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை கைப்பற்றும் என சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.

 தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை டைம்ஸ்நவ் - சிவோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை வழக்கமாக வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக., கூட்டணியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக கூட்டணி 65 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மக்கள் நீதி மய்யம் 5 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ்நவ்-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் பா.ஜ.க., கூட்டணி அரசு ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 இடங்களில் பா.ஜ.க, - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி 18 இடங்களிலும், காங்., - திமுக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் - 154 இடங்களை பிடித்து வெற்றி பெறும் எனவும், பா.ஜ.க - 107, கம்யூனிஸ்டு - காங்., கூட்டணி - 33 இடங்களையும் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Women's Reservation Bill: தமிழகத்தில் திமுக சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.. மோடி குற்றச்சாட்டு
டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!