இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதி.. தொகுதிகளை இறுதி செய்வதில் திமுக தீவிரம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2021, 12:05 PM IST
Highlights

ஆம்பூர் அல்லது வாணியம்பாடி இதில் ஏதேனும் ஒன்று கொடுக்க கோரியுள்ளதாகவும். மேலும், பாபநாசம் - சிதம்பரம் இதில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்
 


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதியாகி விட்டது எனவும், மீதமுள்ள இரண்டு தொகுதிகள் மாலை முடிவு செய்யப்படும் எனவும் சென்னையில் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒதுக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்துகிறது. 

அந்தவகையில் காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், கடையநல்லூர் தொகுதி தங்களுக்கு ஒத்துக்கப்படுவதாக திமுக தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும், ஆம்பூர் அல்லது வாணியம்பாடி இதில் ஏதேனும் ஒன்று கொடுக்க கோரியுள்ளதாகவும். மேலும், பாபநாசம் - சிதம்பரம் இதில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும் 2 தொகுதிகள் குறித்து  திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு இன்று மாலை முடிவு செய்யப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் காதர் மொய்தீன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தரப்பில் வெற்றிக்கான இடங்கள் மற்றும் வேட்பாளர்களை முன்வைத்தே திமுகவுடன் இடங்களை கேட்டுள்ளதாகவும், இன்று மாலை மீதமுள்ள 2 இடங்கள் எந்தெந்த தொகுதிகள் என தெரிந்திவிடும் என அவர் கூறினார்.  

 

click me!