BREAKING: ஜவ்வாக இழுத்த பேச்சுவார்த்தை. தில்லாக முடிவெடுத்த கேப்டன். அதிமுக கூட்டணியில்இருந்து தேமுதிக விலகல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2021, 1:31 PM IST
Highlights

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அதிமுக-தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அதிமுக-தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொகுதி உடன்பாடு உள்ளிட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 21 தொகுதிகள்  கொடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல பாஜகவுக்கும் கவுரவமான எண்ணிக்கையில்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக  முன் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை ஏற்க மறுத்த தேமுதிக பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட அளவிற்கு தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரி வந்தது. இந்நிலையில் 10 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பு இல்லை என்று அதிமுக கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக தேர்தலில் தனித்துப் போட்டியிட  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.   பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில்,  அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்பு நடத்தியது, அதில் பல மாவட்ட செயலாளர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டுமென வலியுறுத்தியதாக தெரிகிறது. 

இந்நிலையில் அக்காட்சியை நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில், அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றைக் கருத்துக்களின் அடிப்படையில், இன்றிலிருந்து 9-3-2021 அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என அவர் அறிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மற்றும் அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!