ஆளுநர் என்ன விரோதியா ? இப்படி பார்க்கறீங்க முதல்வரே ? முதல்வருக்கு சவால் விட்ட வானதி சீனிவாசன் !

Published : Apr 19, 2022, 04:32 PM IST
ஆளுநர் என்ன விரோதியா ? இப்படி பார்க்கறீங்க முதல்வரே ? முதல்வருக்கு சவால் விட்ட வானதி சீனிவாசன் !

சுருக்கம்

தமிழகதத்தில் மோடியை யார்  ஆதரித்தாலும் உடனே பயத்தால் ஆதரிக்கிறார்கள், பதவிக்காக ஆதரிக்கிறார்கள், ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். மோடியை தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தமிழகத்தில் விமர்சிக்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாள் கொண்டாடத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பாஜகவின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வளையல் அணிவித்து, கீரைக் கட்டுகள்  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், ‘அரசியலமைப்பு சட்டத்தில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் தனித்தனியே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

சட்டசபைதான் உயர்ந்தது , நீதித்துறைதான்  உயர்ந்தது அல்லது  நிர்வாகத் துறைதான் உயர்ந்தது என அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. முதல்வர் ஆளுநரை  விரோதி போல தொடர்ந்து பார்த்து வருகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அவசியம் இல்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக தமிழக அரசு  நினைத்தால் நீதித்துறை வாயிலாக கேள்வி கேட்கலாம். 

அப்படி இல்லாமல் தெருவில் இறங்கி போராடி ஆளுநரை அசிங்கப்ப்படுத்துவதை தமிழக பாஜக  ஏற்காது. தமிழகதத்தில் மோடியை யார்  ஆதரித்தாலும் உடனே பயத்தால் ஆதரிக்கிறார்கள், பதவிக்காக ஆதரிக்கிறார்கள், ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். மோடியை தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தமிழகத்தில் விமர்சிக்கின்றனர்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : தமிழகத்தை ஆளும் இரு சூரியன்கள்.. இது ஒரு தெய்வ செயல்.! தருமபுரம் ஆதீனம் அதிரடி பேச்சு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!