லண்டன் House of Lords-இல் உரையாற்ற முதல்வருக்கு அழைப்பு.. மோடிக்கே டஃப் கொடுக்கும் ஸ்டாலின்..!

Published : Apr 19, 2022, 03:47 PM ISTUpdated : Apr 19, 2022, 03:52 PM IST
லண்டன் House of Lords-இல் உரையாற்ற முதல்வருக்கு அழைப்பு.. மோடிக்கே டஃப் கொடுக்கும் ஸ்டாலின்..!

சுருக்கம்

முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக துபாய் நாட்டில் நடைபெற்ற தொழில் கண்காட்சி கலந்துகொண்டார். இதனையடுத்து விரைவில் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

வெற்றிகரமாக முடிந்த துபாய் பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பல்வேறு நாட்டின் முன்னணிதொழில்நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் துபாய் நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டார்கள் கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கை ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இதனை தொடர்ந்து அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதேபோல 3300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் லுலு மால் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதே போல பல்வேறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டார். 

லண்டன் வருமாறு அழைப்பு

முதலமைச்சரின் துபாய்  பயணம் வெற்றிகரமாக அமைந்த நிலையில் அடுத்த கட்டமாக அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் முதலமைச்சரை  தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் அடுத்த கட்ட பயணம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் லண்டனில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் என்ற அரங்கில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் அமர்ஜித் சிங் சந்தித்து House of Lords அரங்கில் உரையாற்றிட அழைப்பு விடுத்த இந்திய வணிகக் குழுவின் தலைவர் பட்டேல் அவர்களின் கடிதத்தை கொடுத்தார். 

விரைவில் லண்டன் பயணம்

இந்த கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். எனவே தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் 10 ஆம் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் லண்டன் பயணம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்வேறு முன்னனி தொழில் நிறுவன இயக்குனர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது. 


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!