தயார் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியல்.! விரைவில் வெளியிடுவோம் - இபிஎஸ்யை அலறவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்

Published : Oct 04, 2022, 03:03 PM IST
தயார் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியல்.! விரைவில் வெளியிடுவோம் - இபிஎஸ்யை அலறவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் இதை குறித்து வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணி ஓபிஎஸ்யை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்க்கு பதில் அளித்த ஜேசிடி பிரபாகர், நாமக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக 3 மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உடன் அதனைக் கண்டு அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த தங்கமணி ஒருவித பயத்துடனும் கவலையுடனும்  பயத்துடனும் பேசியுள்ளதாக தெரிவித்தார்.  பொதுக்குழு  கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என கேள்வி எழுப்பினார்.

10 வருடங்களில் கருப்பு, நீல நிற சட்டை அணிய முடியாத நிலை வரலாம்...!ஆர்எஸ்எஸ்க்கு எதிராக அலறும் திருமாவளவன்

தயார் நிலையில் ஊழல் பட்டியல்

இதனை தொடர்ந்து பேசிய கோவை செல்வராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் இதை குறித்து வெளியிடப்படும் என தெரிவித்தார்.  தமிழக அரசு நியாயமாக செயல்படுகிறது என்றால் கொடநாடு கொலை வழக்கை ஆறு மாத காலத்திற்குள் விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்தினால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுவது உறுதியாகிவிடும் என கூறினார். 

இதையும் படியுங்கள்

நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!