அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Dec 7, 2022, 11:56 AM IST
Highlights

 அதிமுக 4 கம்பெனி ஆக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் ஆறு மாத காலத்தில் அது காணாமல் போய்விடும் எனவே அதிமுக நிர்வாகிகள் தாய்க்கழகமான திமுகவில் இணை வேண்டும் என கோவை செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

அதிமுக- அதிகார மோதல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிகார போட்டி காரணமாக 4 பிரிவாக பிரிந்துள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தால் அதிமுக முக்கிய தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் தான் எந்தவித பொறுப்பில் இருந்தும் தான் நீக்கப்படவில்லை எனவும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது செய்தி தொடர்பாளராக  தனக்கு அவர் பொறுப்பை கொடுத்தாக கூறினார். 

அறிவாலயத்திற்கு வந்த கோவை செல்வராஜ்..! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்

தற்போது அதிமுக 4 அணியாக பிரிந்து ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் விரைவில் அதில் இருக்கக்கூடிய பிற நிர்வாகிகள் தாய் கழகமான திமுகவில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தி அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து உயிர் காப்பாற்றி இருக்கலாம்,  அல்லது வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு போய் இருக்கலாம்.  ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் தங்கள் பதவிக்காக சுயநலமாக செயல்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு காரணமாகிவிட்டார் என குற்றம் சாட்டினார். 

இபிஎஸ்க்கு தகுதி இல்லை

அதிமுக ஒரு கம்பெனியாக போல செயல்படுவதாகும் இன்னும் ஆறு மாத காலத்தில் அந்த கம்பெனி இருக்காது எனவும் கூறினார். காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி பேச யோக்கியதை கிடையாது என தெரிவித்தார். விரைவில் ஐந்தாயிரம் பேருடன் திமுகவை இணைவோம் என தெரிவித்தார். கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் திமுகவை குறை கூறி பேசியதாகவும் தற்போது முதலமைச்சர் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறினார்.

2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்

14 வயதில் இருக்கும் பொது நான்  திமுகவிற்கு ஓட்டு கேட்டு இருப்பதாக கூறிய அவர்,  தற்போது தாய் கழகமான திமுகவில் இணைந்து உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் கடந்த 7 ஆண்டுகளாக பயணித்த நான் வக்காலத்து வாங்கியதுக்கு நான் பொது மக்களிடையே மன்னிப்பு கேட்க்கொள்வதாகவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவை அழிக்க ஆயிரம் பேர் எதற்கு? பழனிசாமி ஒருவரே போதாதா? இதுதான் உங்களின் கிழிந்த ஜாதம்.. முரசொலி..!

click me!