அறிவாலயத்திற்கு வந்த கோவை செல்வராஜ்..! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

Published : Dec 07, 2022, 10:46 AM ISTUpdated : Dec 07, 2022, 10:50 AM IST
அறிவாலயத்திற்கு வந்த கோவை செல்வராஜ்..! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சுருக்கம்

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதராவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் ஆதரவாளர்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அப்போது ஓபிஎஸ்யின் வலதுகரமாக இருந்த கோவை செல்வராஜ் எடப்பாடி அணியினருக்கு பதிலடி கொடுத்து கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் கோவை மாவட்டத்திற்கு நியமித்தார். இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ்  அறிவித்தார். 

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்

அதிமுகவின் வளர்ச்சிக்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செயல்படவில்லையெனவும், அனைவரும் சுயநலமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில்  கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கோவை செல்வராஜ் இணைந்துக்கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக மு.க.ஸ்டாலின் திமுக கரை வேட்டி கொடுத்து வரவேற்றார்.

இதையும் படியுங்கள்

அம்பேத்கருக்கு காவி உடை..! நெற்றியில் விபூதி பட்டை..? இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!