அம்பேத்கருக்கு காவி உடை..! நெற்றியில் விபூதி பட்டை..? இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

By Ajmal KhanFirst Published Dec 7, 2022, 10:18 AM IST
Highlights

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு காவி சட்டை அணிவித்தும், குங்கும பொட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இந்த போஸ்டரை அச்சடித்த இந்து மக்களை கட்சியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

அம்பேத்கர் நினைவு நாள்

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி நாடு முழுவதும் அவரது உருவபடத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த முறை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சென்னையில் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்பேத்கர் பிறந்தநாளின் போது அவரது சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவி சட்டை அணிவித்து குங்குமம் பூசியிருந்தார். இதற்க்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன், விபூதி குங்குமம் பூச மாட்டேன்; எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் நேற்று உத்தரவாத கடிதம் தாக்கல் செய்திருந்தார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் போட்டி.! கோயில் ராஜபட்டரின் வேட்டியைப் பிடித்து இழுத்த திமுக எம்எல்ஏ

இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

அர்ஜூன் சம்பத் உயர்நீதிமன்றத்தில் நேற்று உத்தரவாதம் கடிதம் தாக்கல் செய்த நிலையில்  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் 'காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்' என பதிவு செய்யப்பட்டிருந்தது.  இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து அந்த போஸ்டரை அகற்றிய போலீசார் அம்பேத்கர் உருவப்படத்திற்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள்

தேசிய தலைவர் அம்பேத்கரை ஒரு சாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் திருமா! வெளுத்து வாங்கும் பாஜக
 

click me!