அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

By Raghupati R  |  First Published Jun 14, 2022, 1:07 PM IST

Annamalai : குறிப்பாக அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் என பலரையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார். 


தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக, கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், திமுக மீதும், நிர்வாகிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். இப்படி அண்ணாமலை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். 

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், முத்துசாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு தினமும் பதிலடி கொடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்நாட்டில் அரசியல் செய்து வரும் பாஜக ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யவில்லை என்றும் கட்சியின் சுய ஆதாயத்துக்காக அரசியல் செய்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் என பலரையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையிலே மேடைகளில் அண்ணாமலை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ஆதாரத்துடன் அவர் பேசுவதில்லை என்றும் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த ரகுநாத் என்பவர் மேற்க்கு மண்டல ஐஜி சுதாகர், மோயமுத்தூர் போலிஸ் கமிஷ்னரிடம் நேரிலே புகார் தந்திருந்தார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு  போஸ்டலிலும் புகார் தந்திருந்தார். அந்த புகார் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘அரசியலில் தன்னை முன்னிலைபடுத்திக்கொள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை தமிழ்நாட்டின் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது குறை சொல்லி அவதூறை பேசி வருவதாகவும் ரகுநாத் குற்றம்சாட்டி இருக்கின்றார். அதிகாரிகள் நியமனம், அறிவிக்கப்படாத டெண்டரில் ஆளும் கட்சியினர் முறைகேடு, முந்தைய ஆட்சி காலத்தில் அதிமுகவினர் செய்த ஊழல்களை மறைத்து, பொதுமக்களுக்கு தெரியாமல் மறைக்க திமுகவினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து வருவதாகவும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் குற்றம்சாட்டினார்.  

முந்தைய ஆட்சியாளர்களின் சட்ட விரோத செயல் மற்றும் ஊழல்களை மறைக்கவே திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி, நாசர், சுப்ரமணியன் உள்ளிட்டோர் மீது அண்ணாமலை ஆதாரமற்ற குற்றம் சுமத்துவதாகவும் எனவே அவர் பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும் எனவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு களையும் அவதூறு பேசினால் அவரை கிரிமினல் வழக்கு பதிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ரகுநாத் தந்த புகாருக்கு சி எஸ் ஆர் தந்திருக்கின்றனர். அண்ணாமலை மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ? 

இதையும் படிங்க : திமுக அமைச்சரின் மதவெறி செயலை கண்டிக்கிறோம்.. ஒன்று திரளும் இந்து அமைப்புகள் - சமாளிக்குமா திமுக ?

click me!