இதற்காக தான் சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டாரா? புது குண்டை தூக்கி போடும் முக்கிய அரசியல் பிரமுகர்..!

By vinoth kumar  |  First Published Jun 14, 2022, 11:51 AM IST

 4-வது அலைக்கான அறிகுறியா? என்று மக்களிடையே அச்சம் உருவாகியுள்ள சூழலில் கடந்த ஆண்டுகளில் திறம்பட செயல்பட்டு ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவை சிறப்பாக கையாண்டார் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை மாற்றுவதற்கான காரணம் என்ன?


திமுக அரசில் நடைபெறும் ஊழலை மறைக்கவே ஒரே நாளில் 51 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யுவராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மாறாக தங்களுக்கு சாதகமில்லாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொத்துக்கொத்தாக பணியிடமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 51 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலாளராக முந்தைய அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் திமுக ஆட்சியிலும் சுகாதாரத் துறைச் செயலாளராக தொடர்ந்து வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிகளை செய்ததால் பொது மக்கள் இடத்தில் இவருக்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக குறைக்கப்பட்டதற்கு இவருக்கும் பங்கு உண்டு அப்படியிருந்தும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்று மக்களிடையே அச்சம் உருவாகியுள்ள சூழலில் கடந்த ஆண்டுகளில் திறம்பட செயல்பட்டு ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவை சிறப்பாக கையாண்டார் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை மாற்றுவதற்கான காரணம் என்ன?

அண்மையில் தமிழக எதிர்க்கட்சிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டார்கள் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டக கொள்முதல் டெண்டரில் 100 கோடி ரூபாய் லஞ்சம் கை மாறியதாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது? இதன் காரணமாக ஊழல் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விடுவார்களோ? என்ற பயத்தில் திமுக அரசு இந்த துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது. தமிழக அரசு இதற்குண்டான விளக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என யுவராஜா கூறியுள்ளார்.

click me!