Nupur sharma : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை ; நுபுர் சர்மாவுக்கு போலீஸ் சம்மன் !

Published : Jun 14, 2022, 11:47 AM IST
Nupur sharma : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை ; நுபுர் சர்மாவுக்கு போலீஸ் சம்மன் !

சுருக்கம்

Nupur Sharma row : பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து நுபுர் சர்மாவை பாஜக கட்சி சஸ்பெண்ட் செய்தது. நவீன் குமார் ஜிண்டால் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியது. மேலும், பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்பினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 

உத்தர பிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. உத்தர பிரதேசம், ஜார்க்ண்ட் மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாகின. பல இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார், ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. 

கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு பிறகு தான் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பிற நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் நுபுர் சர்மா மீது கொல்கத்தாவின் நர்கெல்டங்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

வருகிற 20-ந் தேதிக்குள் ஆஜராகும்படி அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே மராட்டிய மாநில போலீசார் நுபுர்சர்மாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதற்கு கால அவகாசம் கேட்டிருந்தார் நுபுர் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ? 

இதையும் படிங்க : திமுக அமைச்சரின் மதவெறி செயலை கண்டிக்கிறோம்.. ஒன்று திரளும் இந்து அமைப்புகள் - சமாளிக்குமா திமுக ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..