வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு.. இபிஎஸ்-க்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் ரெய்டு?

By vinoth kumar  |  First Published Apr 20, 2023, 1:43 PM IST

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து  தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து போது தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இபிஎஸ்-ஐ முந்தும் ஓபிஎஸ்.. மேலும் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவித்து அதிரடி.. எந்ததெந்த தொகுதி தெரியுமா?

மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் கேரளா செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி சயானின் மனைவியும் குழந்தையும் உயிரிழந்தனர். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி கேமராக்களைக் கையாண்டு வந்த தினேசும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. 

இதையும் படிங்க;- இபிஎஸ்யை பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..! இரட்டை இலை சின்னமும் ஒதுக்கீடு- அதிர்ச்சியில் ஓபிஎஸ்

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து  தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தவெளியில் உள்ள காவலர் குடியிருப்பில் கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி  போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை ஆவடி ஆயுதப்படை டிஎஸ்பியாக கனகராஜ் பணியாற்றி வருகிறார். 

click me!