குஷ்பு ஒரு நல்ல நடிகை..! எந்த கட்சிக்கு போனாலும் நன்றாக நடிப்பார்.! திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். முத்தரசன்

Published : Oct 16, 2020, 11:07 PM IST
குஷ்பு ஒரு நல்ல நடிகை..! எந்த கட்சிக்கு போனாலும் நன்றாக நடிப்பார்.! திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். முத்தரசன்

சுருக்கம்

காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, டெல்லிக்கு சென்று பாஜகவில் இணைந்து கொண்டார்.  காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் வெளுத்து வாங்கியவர் குஷ்பு.அந்த அளவிற்கு இருந்த குஷ்பு திடீரென பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பேசிய குஷ்பு.." காங்கிரஸ் மூளைவளர்ச்சி இல்லாத கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

இந்தநிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “குஷ்பு ஒரு நல்ல நடிகை. எந்த பாத்திரம் கொடுத்தாலும் நன்றாக நடிக்க கூடியவர். அது போல அரசியலிலும் அவர் எந்த கட்சியில் சேர்ந்தாலும் அந்தக் கட்சிக்கு ஏற்றார் போல் நடித்துக் கொண்டிருப்பார். நடிகை குஷ்புக்கு நேற்று காங்கிரஸின் பாத்திரம். இன்று அவருக்கு பிஜேபியின் பாத்திரம். நாளை எந்த கட்சியின் பாத்திரமோ?

திமுக தேர்தல் பணியை துவங்கியதால், அதிமுகவும் தேர்தல் பணியை துவங்கியுள்ளது. ஆனால் வெற்றி என்பது திமுக கூட்டணிக்குதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 99% வெற்றி பெற்றது போல் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி ஒற்றுமையுடன் இருந்து போராடி வெற்றி பெறுவோம்”.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி