முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்... மக்கள் நீதி மய்யம் அதிரடி அறிவிப்பு... தேர்தல் கூட்டணி பற்றி முக்கிய முடிவு..!

By Asianet TamilFirst Published Oct 16, 2020, 9:11 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. அண்மையில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயர் நகரில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும் மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், “நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒருமித்தக் கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பது, கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு கட்சி தலைவரான கமல்ஹாசனுக்கு அளிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

click me!