கேரள உள்ளாட்சி தேர்தலில் அதிர்ச்சி.. காங்கிரஸ் மேயர் வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வி..!

By vinoth kumarFirst Published Dec 16, 2020, 4:41 PM IST
Highlights

கொச்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் என்.வேணுகோபால், நார்த் ஐலேண்ட் வார்டில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

கொச்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் என்.வேணுகோபால், நார்த் ஐலேண்ட் வார்டில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், கொச்சி மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர் என்.வேணுகோபால் நார்த் ஐலேண்ட்  வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து வேணுகோபால் கூறுகையில், என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். வாக்களிக்கும் இயந்திரத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. என்ன நடந்தது என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும் என்றார்.

click me!