காசியில் மசூதியை அகற்றி காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்படும்.. அடுத்த குண்டை வீசிய சு,சாமி!!

By Thiraviaraj RMFirst Published Mar 7, 2020, 8:20 PM IST
Highlights

காசியில் மசூதியை அகற்றிவிட்டு காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்படும் என்று சு.சாமி திருச்சியில் புதிதாக ஒரு குண்டை வீசிவிட்டு சென்றிருக்கிறார். முஸ்லீம்களுக்கு அடுத்த சிக்கல் காசியில் காத்திருக்கிறது என்கிறார்கள் சு.சாமி ஆதரவாளர்கள்.

T.Balamurukan

சென்னையில் இருந்து திருச்சி வந்த சுப்பிரமணியசாமி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.
“அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த பணி 2ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டி ராமர் கோவில் கட்டும் பணிகள் தீவிரமடையும்.
காசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து ஒளரங்கசீப் காலத்தில் மசூதி கட்டப்பட்டது. அங்கு மீண்டும் காசிவிஸ்வநாதர் ஆலயமாக மாற்ற அதற்கான கமிட்டி முயற்சி செய்யும். அந்த கமிட்டிக்கு  நான் தான் தலைவராக இருக்கிறேன். சட்ட ரீதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். திமுகவிற்கு வந்திருக்கும் பிரசாநி;த் கிN~hர் யார் என்று தெரியாது. ஆனால் தமிழகத்தில் சசிகலாவை தவிர்த்து அரசியல் கிடையாது. சசிகலாவுக்கு ரெம்ப அரசியல் அனுபவம் இருக்கிறது. அவர் பின்னால் ஒரு சமுதாயமே ஒற்றுமையாக இருக்கிறது.என்றார்.

click me!