ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சுப்பிரமணியசாமி கூறிய கருத்து கேவலமானது. தடதடக்கும் விருதுநகர் எம்பி !!

By Thiraviaraj RMFirst Published Mar 7, 2020, 7:44 PM IST
Highlights

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சுப்பிரமணியசாமி கூறிய கருத்து கேவலமானது. அரசியல் அனைவருக்குமானது. யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் பாராட்டப்பட வேண்டும். இதில் மதத்தையோ, சாதியையோ கொண்டுவருவது கேவலமானது. ரஜினிஅரசியலுக்கு வந்தாது முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்கிற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. என்று விருதுநகர் எம்பி கூறியிருக்கிறார்.

T.Balamurukan

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சுப்பிரமணியசாமி கூறிய கருத்து கேவலமானது. அரசியல் அனைவருக்குமானது. யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் பாராட்டப்பட வேண்டும். இதில் மதத்தையோ, சாதியையோ கொண்டுவருவது கேவலமானது. ரஜினிஅரசியலுக்கு வந்தாது முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்கிற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. என்று விருதுநகர் எம்பி கூறியிருக்கிறார்.

விருதுநகரில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "சிவகாசியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுகுறித்து கண்டன அறிக்கையை ஏற்கெனவே நான் வெளியிட்டுள்ளேன். இந்தப் பிரச்சனையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரடியாக சம்பந்தப்பட்டு இருக்கிறார். அவர் தொடர்ந்து அமைச்சராக இருப்பது,அ தமிழக அமைச்சரவையில் இருப்பவர்கள் அனைவரையும் கலங்கப்படுத்தும். அவரை பதவி நீக்கம் செய்யாவிட்டால் இந்தப் பிரச்சினை குறித்து ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைப்பேன்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சுப்பிரமணியசாமி கூறிய கருத்து கேவலமானது. அரசியல் அனைவருக்குமானது. யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் பாராட்டப்பட வேண்டும். இதில் மதத்தையோ, சாதியையோ கொண்டுவருவது கேவலமானது. ரஜினிஅரசியலுக்கு வந்தால் முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்கிற நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.ரஜினி ஒரு நல்ல நடிகர், அவருக்குப் பல ரசிகர்கள் இருக்கிறோம். அவர் அரசியலுக்கு வர மாட்டார் என நினைக்கிறேன். அரசியலில் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தான் செய்து வருகிறார். ரஜினி அர்ஜுன் சம்பத் போன்றவர்களுடன் இணைந்து பேசிக்கொண்டிருப்பது நாகரிகமாக இல்லை.

பேராசிரியர் அன்பழகனை நேரில் சந்தித்ததில்லை. அவரைப்பற்றி படித்துள்ளேன். தமிழக கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர். மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர். அவர் இறந்தது தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய இறப்பிற்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம்.மத்திய அரசு தமிழருடைய உண்மையான வரலாற்றை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு எந்த விதத்திலும் இதற்கு ஒத்துப்போகக் கூடாது.கீழடியை தொல்லியல் துறை ஆய்வு செய்ய அஞ்சியது. ஆனால் தமிழகத்தின் கோயில்களை எடுத்துக் கொள்வோம் என்பது நியாயமற்றது" என்றார்.

 "நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் மிகப்பெரிய தீ பற்றிக்கொண்டது. தீப்பெட்டி அமித்ஷாவின் கையில் உள்ளது. அமித்ஷா வந்து அவையிலேயே பதில் சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக இருந்தது.ஆனால் சபாநாயகரும் ஆளும் கட்சியினரும் தொடர்ந்து எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருந்ததால் நாங்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடினோம்.இதைப்பொறுத்துக் கொள்ளாமல் எங்களை இடைநீக்கம் செய்து விட்டார்கள். அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய தெளிவான கோரிக்கை.டெல்லி வன்முறை என்பது அமித்ஷாவின் தோல்வி என்பது எங்களுடைய தெளிவான கருத்து" என்றார்.

click me!