கொரோனா ஆபத்து அதிகமுள்ள 6 மாநிலங்கள்...!! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2020, 6:06 PM IST
Highlights

இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் விமானநிலையங்களில் வைத்தே பரிசோதனைகள் நடத்தப்படுகிறது .  இதில் கொரோனா இருப்பது தெரிய வந்தால் உடனே அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 

இந்தியாவில் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கி உள்ள கொரோனா வைரஸ் 6 மாநிலங்களில் எளிதில் பரவ வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரித்துள்ளது எனவே அந்த  6 மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது உலகையே  அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவில் 31 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 23 பேருக்கு அதன் அறிகுறிகள்  தென்பட்டுள்ளது . எனவே  அவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது . 

இதற்கிடையில் கொரோனா அறுகுறியுடைய 13 ஈரானிய சுற்றுலாப்பயணிகள் அமிர்தசரஸ்  விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது .  இவரை டெல்லி ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் நோய் தாக்கம்  அதிகமாக இருந்துவருகிறது.   இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாநில  அரசுகளும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது,  இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் விமானநிலையங்களில் வைத்தே பரிசோதனைகள் நடத்தப்படுகிறது .  இதில் கொரோனா இருப்பது தெரிய வந்தால் உடனே அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் அதிக ஆபத்துள்ள ( கொரோனா எளிதில் தாக்கக்கூடிய )  மாநிலங்களாக ஆறு மாநிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது . மேற்கு வங்கம் ,  பீகார் உத்தரகாண்ட் ,  உத்தரபிரதேசம் ,  பஞ்சாப் ,  சிக்கிம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது .  6 மாநிலங்களும்  விழிப்புணர்வுடன் செயல்பட்டு அனைத்துவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதுடன்,   மேற்கு வங்கம் மற்றும் டார்ஜிலிங் ஹோட்டல்களில் அனைத்தும் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . 

 

click me!