தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விவகாரம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானத்தின் மூலப் பொருட்களைக் கொண்டு இந்த வாட்ச் தயாரித்தார்கள்.
மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றன. ரபேல் விமானம் ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதன் பாகத்தில் இருக்கும் இந்த வாட்சை கட்டி இருக்கிறேன். ஒவ்வொரு வாட்ச்சிற்கும் எண் இருக்கும், இது 149வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கிறேன். இது என் தனிபட்ட விஷயம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்து இருந்தார்.
இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்று பதிவிட்டிருந்தார்.
கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் டி.எம்.செல்வேந்திரன். திமுகவைச் சேர்ந்த இவர் கரூரில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், 'தம்பி மல! பில்லு இன்னும் வரல' என்று குறிப்பிட்டுள்ளார். கரூர் முழுவதும் ஒட்டியுள்ள இந்த போஸ்டர், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!