கவுண்டர் ஒருவர் முதலமைச்சரானது நாங்கள் போட்ட பிச்சை! கருணாஸ் பேச்சால் சர்ச்சை!

By sathish kFirst Published Sep 19, 2018, 9:27 PM IST
Highlights

கவுண்டரான ஒருவர் முதலமைச்சரானது நாங்கள் போட்ட பிச்சை என்று நடிகர் கருணாஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

கவுண்டரான ஒருவர் முதலமைச்சரானது நாங்கள் போட்ட பிச்சை என்று நடிகர் கருணாஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் கடந்த ஞாயிறன்று கருணாஸ் கட்சியினர் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றதால் கருணாஸ் அன்று பேசியது பெரிய அளவில் விவாதமாகவில்லை. இந்த நிலையில் ஆர்பாட்டத்தின் போது பல்வேறு ஜாதிகளுக்கு எதிராக விஷமத்தனத்துடன் கருணாஸ் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

   அதில், கூவத்தூர் என்று ஒன்று இருப்பதை சசிகலாவிடம் தெரிவித்ததே தான் தான் என கருணாஸ் கூறுகிறார். மேலும் கூவத்தூர் விடுதிக்கு ஒரே ஒரு பாதை தான் என்றும் மூன்று பக்கமும் கடல் என்பதாலும் எவனாலும் ஓட முடியாது என்று கூறி அங்கு எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததும் தான் என்று கருணாஸ் கூறியுள்ளார். மேலும் கூவத்தூரில் வைத்து எம்.எல்.ஏக்கள் பலரும் தினகரன் காலில் விழுந்ததை தான் பார்த்ததாக தெரிவித்தார். தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தினகரன் காலில் விழுந்ததாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.

   மேலும் எக்குலமும் வாழ வேண்டும் என்றால் முக்குலம் ஆள வேண்டும் என்று அன்றே சொல்லி வைத்திருப்பதாக கருணாஸ் கூறியுள்ளார். வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒரே இனம் முக்குலத்தோர் இனம் தான் என்பது தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார். வேறு எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதலமைச்சராகவில்லை என்றும் கருணாஸ் அந்த வீடியோவில் கூறுகிறார்.

   மேலும் தற்போது கவுண்டர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதாக கூறுகிறார்கள். அந்த கவுண்டருக்கு முதலமைச்சரை போட்டதே சசிகலா உள்ளிட்ட நாங்கள் தான் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்கள் அதிகம் பேர் கவுண்டர்கள் தான் என்றும் காரணமே இல்லாமல் கருணாஸ் அந்த ஆர்பாட்டத்தில் கூறியுள்ளார்.

   ஒரு ஆர்பாட்டத்தில் பேசும் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசலாம், இல்லை என்றால் கருணாஸ் தன்னுடைய ஜாதியை முன்னிலைப்படுத்தி பேசிக் கொள்ளலாம், ஆனால் எதற்காக தேவையே இல்லாமல் கவுண்டர்களை விமர்சித்துள்ளார் என்று கடும் கண்டனங்கள எழுந்து வருகின்றன.

click me!