அவரு சரிப்பட்டு வருவாரா ? இல்ல இவரு சரிப்பட்டு வருவாரா ? கூட்டணி கணக்கு போட்ட மோடி !! குழப்பத்தில் பாஜக !!

By Selvanayagam PFirst Published Sep 19, 2018, 9:10 PM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா? அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா ? என்பது குறித்து உளவுததுறை அளித்த ரிப்போர்ட்டால் பாஜக மேலிடம் குழம்பிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக இதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன.

பீகாரில் பாஜக நிதிஷ்குமாருடன் கூட்டணி பேசி முடித்துவிட்டது. இதே போன்று தெலங்கானாவிலும் தெலங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து டெல்லியில் சீரியசாக டிஸ்கஷன் நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் கூட்டணி என்பது வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

இதனால் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்த முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழுவும், நிதின் கட்கரி தலைமையில் ஒரு குழுவும் மோடியால் நியமிக்கப்பட்டது.

ஆனால் இந்த குழுக்கள் எடுத்த முடிவு மோடியையே குழப்பிவிட்டது. அருண் ஜெட்லி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்றும். இபிஎஸ், ஓபிஎஸ்ஐ விட டி.டி.வி.தினகரனுக்குத்தான் கூட்டம் கூடுகிறது என்பதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன்தான் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என நிதின் கட்கரியும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடிக்கு, டி.டி.வி.தினகரன் பரவாயில்லை என மத்திய உளவுத் துறையும் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி அவரு பெட்டரா ? இவரு பெட்டரா ? என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!