நாங்க தான் கெத்து... வன்னியர்கள் அவ்வளவா இல்லை... வம்பிழுத்த கருணாஸ்!! உச்சகட்ட டென்ஷனில் ராமதாஸ்

By sathish kFirst Published Sep 19, 2018, 9:02 PM IST
Highlights

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வன்னியர்கள் இல்லை என்றும், வன்னியர்கள் தான் அதிகம் இருப்பதாக ராமதாஸ் பொய் சொல்லி வருவதாக கருணாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வன்னியர்கள் இல்லை என்றும், வன்னியர்கள் தான் அதிகம் இருப்பதாக ராமதாஸ் பொய் சொல்லி வருவதாக கருணாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

   சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணாஸ் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்திற்கு கருணாஸ் அனுமதி வாங்கியிருந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் இருந்து 50 வேன்களில் ஆட்களை கருணாஸ் கட்சியினர் அழைத்து வந்திருந்தனர்.

.

   கூட்டத்தில் பேசிய கருணாஸ் ஒரு கட்டத்தில் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேச ஆரம்பித்தார். அதாவது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஆர்பாட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்தார் கருணாஸ். ஆனால் திடீரென கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் அதிகம் இருப்பது வன்னியர்கள் என்று ராமதாஸ் கூறிக் கொண்டிருக்கிறார்.

   ஆனால் ராமதாஸ் கூறுவது பொய். தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் கிடையாது. தமிழகத்தில் அதிகம் இருப்பது முக்குலத்தோர் தான் என்று கருணாஸ் கூறினார். அதாவது தமிழக மக்கள் தொகையில் சுமார் 28 விழுக்காட்டினர் முக்குலத்தோர் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே ஜாதி வாரியாக கணக்கெடுத்தால் ராமதாஸ் கூறுவது பொய் என்றும், முக்குலத்தோரேஅதிகம் என்பதும் தெரிந்துவிடும் என்று கருணாஸ் கூறினார்.

கருணாசின் இந்த பேச்சுக்கு பா.ம.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் 28 சதவீதம் முக்குலத்தோர் இருப்பதாக கருணாஸ் தாராளமாக கூறலாம். அதற்கு அவருக்கு நிச்சயம் உரிமை உள்ளது, ஆனால் எதற்காக அவர் தேவையில்லாமல் வன்னியர்களை இந்த விவகாரத்திற்குள் இழுக்கிறார் என்று பா.ம.கவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் இருப்பதாக ராமதாஸ் கூறுகிறாரே தவிர வேறு ஜாதியை குறைத்து பேசுவதில்லை என்று பா.ம.கவினர் தெரிவித்துள்ளனர். எனவே கருணாஸ் தேவையில்லாமல் வன்னியர்களையும், எங்கள் அய்யாவையும் வம்பிழுக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

click me!