2.33 ஏக்கரில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம்... ஓ.பி.எஸ் மனதார வரவேற்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 24, 2021, 11:04 AM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் 2.23 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் 2.23 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ‘’என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர். அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் எடுத்துப்படித்துள்ளோம். அவரின் வசனத்தில் அனல் பறக்கும். பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது. கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.

கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

click me!