PRESS வழக்கறிஞர், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி... காவல்துறை கடும் உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Aug 24, 2021, 10:50 AM IST
Highlights

அ அல்லது G எழுத்து மற்றும் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய தனியார் வாகனங்களை சோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

அ அல்லது G எழுத்து மற்றும் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய தனியார் வாகனங்களை சோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பல தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல G அல்லது அ எழுத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுற்றி வருகின்றன. சிலர் ஹியூமன் ரைட்ஸ், போலீஸ், ஆன் கவர்மெண்ட் டியூடி, ப்ரஸ், வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர்

இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் வாகனச் சோதனையின்போது போலிஸாருக்கு ஒத்துழைப்பதில்லை. எதற்கு வீண் பிரச்சனை என போலிஸாரும் விட்டுவிடுகின்றனர். ஆனால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களின் மூலம் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதைத்தொடர்ந்து இதுபோன்ற ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சோதனையின்போது தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் போலிஸாருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்கவேண்டும்.

மேலும், சீரியல் நம்பர், தேதி, நேரம், வாகன பதிவு எண், பபனர் பெயர், முகவரி, செல் நம்பர், அலுவலக முகவரி, பதவி, போன்றவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிரப்பட்டுள்ளது. 

click me!