மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்.. முதல்வர் ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவிப்பு.

Published : Aug 24, 2021, 10:39 AM ISTUpdated : Aug 24, 2021, 10:47 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்.. முதல்வர் ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவிப்பு.

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். 2.23 ஏக்கரில் 39  கோடி ரூபாய் செலவில் அது அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது திராவிட இயக்க சிந்தணையாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, தேர்தல் நேரத்தின்போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளதால், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. பட்ஜெட் தாக்கலின் போதே, நிதி நெருக்கடி காரணமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்றும், ஆனால் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்றார். சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி செலவில் அது நிர்மாணிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். கருணாநிதியின் வாழ்க்கை சிந்தனை குறித்த நவீன ஒளி படங்களுடன் அந்த நினைவிடம் அமைய உள்ளது என்றும், தமிழக முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்றார்.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்றும், அரை நூற்றாண்டு காலம் தலைப்பு செய்தியாக புகழுடன் வாழ்ந்து மறைந்தவர் கருணாநித என அவர் புகழாரம் சூட்டினார். திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!