கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- ரயில்கள் விபத்தில் 233 பேர் பலி எதிரொலி! அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து! ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.!
இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க;- கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள்.. அமைச்சர் சிவசங்கர் மட்டுமல்ல.! உதயநிதியும் கிளம்புறாரு.!!
ஆகவே இன்றைய நாள் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, கலைஞர் கருணாநிதியின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் - பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.