ஜூன் 1 தலைவருக்கு பிறந்தநாள் விழா...! தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!

First Published May 21, 2018, 3:59 PM IST
Highlights
Karunanidhi Birthday Celebration at Tiruvarur


திமுக தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3 ஆம் தேதி 95-வது வயது பிறக்கிறது. கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா திருவாரூரில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கருணாநிதியின் பிறந்த நாளை ஆண்டுதோறும் திமுகவினர் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். வயது முதிர்வு காரணமாக கருணாநிதி வீட்டிலேயே
ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது முக்கிய தலைவர்களைச் சந்திப்பதுடன் அண்ணா அறிவாலயம், சி.ஐ.டி. காலனி இல்லம் சென்று வருகிறார்.

ஜூன் 1 ஆம் தேதி திருவாரூரில் உள்ள அண்ணா திடலில் கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.

இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சமூக நீதிக் கொள்கையை
இந்தியாவின் தேசியக் கொள்கையாக மாற்றியவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டுள்ளார். காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் காரணமாக இருந்தவர் என்றும்,
இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர் கருணாநிதி என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலவச மின்சாரத் திட்டம், விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து, உழவர் சந்தை என இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி
என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா திருவாரூரில் உள்ள அண்ணா திடலில் ஜூன் 1 அன்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில்
நடைபெறும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

click me!