பாஜகதான் அதிமுகவின் வெற்றிக்கு தடை என இப்போ தான் தெரியுதா.? மாஜி அமைச்சரை விளாசிய கரு.நாகராஜ்

By Ajmal Khan  |  First Published Oct 5, 2023, 12:19 PM IST

அதிமுகவினர் மோடி தான் பிரதமர்னு சொல்லுவாங்க, மாற்றி பேசுவாங்க இதை வழக்கமாக பார்த்து கொண்டுதான் உள்ளோம் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


பாஜகவின் கூட்டணி என்ன.?

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜிடம், செய்தியாளர்கள் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,  கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை அறிவிப்பதாக உள்ளது. அதனை மாநில தலைவரும் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டம் நடைபெறுவதால் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அண்ணாமலை இந்த கூட்டத்தில் சிறிது நேரம் கலந்து கொள்வார். இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு செல்வார்.

தலைமை முடிவுக்கு கட்டுப்படுவோம்

அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவங்களே பேசுவாங்க, மாற்றி பேசுவாங்க, மோடி தான் பிரதமர்னு சொல்லுவாங்க, இதை வழக்கமாக பார்த்து கொண்டுதான் உள்ளோம்.

நத்தம் விஸ்வநாதன்னுக்கு இவ்வளவு காலம் தெரியவில்லையா.? இப்போ தான் தடை தெரியுமா என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து வி.பி.துரைசாமி கூறுகையில், கூட்டணி குறித்து பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தெரிவித்தார். கூட்டணி பற்றி பாஜக தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது எனவும் கே.பி. ராமலிங்கம் கூறினார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடை.! கத்துக்குட்டி அண்ணாமலை, பாஜக டெபாசிட் வாங்காது - விளாசும் நத்தம் விஸ்வநாதன்

click me!