அடுத்தடுத்து திமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்கள்... குஷியில் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumar  |  First Published Nov 5, 2020, 4:16 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மு.க.ஸ்டாலின் திமுகவில் இணைந்தார். 
 


ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மு.க.ஸ்டாலின் திமுகவில் இணைந்தார். 

இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், திருப்பூர் கிழக்கு மாவட்டம், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் - காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளருமான கார்த்திகேய சேனாபதி தி.மு.க.வில் இணைந்தார். திராவிடத்தால் கொங்கு மண்டலமும் தமிழ்நாடும் பெற்ற நன்மைகளை பற்றி ஆய்வாளரை சேனாதிபதி நிகழ்த்தி வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கார்த்திகேய சேனாதிபதிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.  அப்போது, கழக துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி,எம்.எல்.ஏ., - ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tap to resize

Latest Videos

அதேபோல், புதுக்கோட்டை  வடக்கு மாவட்டம்,  அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஏ.இளங்கோ தலைமையில் ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் சி.சின்னப்பா, கறம்பகுடி எம்ஜிஆர் மன்றத் தலைவர் ஆறுமுகம், கறம்பகுடி ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் முத்துக்குமார் மற்றும் தஞ்சை எஸ்.நடராஜன் முன்னாள் எம்எல்ஏ அவர்களின் பேரனும் - கல்லீரல் தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் கல்லீரல் மாற்று மயக்க மருந்து நிபுணருமான டாக்டர் எம்.கார்த்திக்ராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்தார்.  

click me!