ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.
பாஜக வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள். காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது என திருமாவளவன் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் கூறி வந்த நிலையில் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெருபான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 137, பாஜக 63, மஜத 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த தேர்தலில் பாஜக அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்;- கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர். ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.
பாஜக வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள். காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது. கட்டுக்கோப்புடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
அதிமுக இப்போதே புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும் என திருமாவளவன் கூறியுள்ளார்.