தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிச்சி இருக்கீங்க! ரொம்ப சந்தோஷம்! முதல் ஆளாக வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

By vinoth kumar  |  First Published May 13, 2023, 1:55 PM IST

கர்நாடகாவில் 224 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 132 தொகுதியில் காங்கிரசும், 66 தொகுதிகளில் பாஜகவும், 22 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன.


கர்நாடாகாவில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தனிப்பெருபான்மை பெற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 224 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 132 தொகுதியில் காங்கிரசும், 66 தொகுதிகளில் பாஜகவும், 22 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தனி பெருபான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. 

Latest Videos

இதையும் படிங்க;- மோடி, அமித்ஷா கர்நாடகாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. சித்தராமையா பேட்டி

இந்த வெற்றியை தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  கர்நாடகாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் இவர்தானா? விட்டுக் கொடுப்பாரா சித்தராமையா?

இந்நிலையில், கர்நாடாகாவில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தனிப்பெருபான்மை வெற்றி பெற்ற நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி,  சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் தொலைபேசி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

click me!