தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு உதவிய இந்த வாக்குறுதியை தற்போது கர்நாடகா காங்கிரஸ் வெற்றி உதவியுள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தனி பெருபான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாது மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட நோக்கில் பாஜகவும், கடந்த முறை விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கி காங்கிரஸ் கட்சியும் போட்டா போட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தேர்தல் அறிக்கையை பாஜக, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தனர்.
undefined
பாஜக ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தினசரி அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். மாதந்தோறும் 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
அதேபோல், காங்கிரஸ் தரப்பில் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் அல்லது யாரும் பெருபான்மை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 120 தொகுதிகளில் காங்கிரசும், 73 தொகுதிகளில் பாஜகவும், 29 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை பெற்றுள்ளன. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தனி பெருபான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த அளவுக்கு வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற இலவசங்களாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் வாக்குறுதி பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு உதவிய இந்த வாக்குறுதியை தற்போது கர்நாடகா காங்கிரஸ் வெற்றி உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.