காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும்.. அமித்ஷா பேச்சு..

By Ramya s  |  First Published Apr 26, 2023, 11:05 AM IST

காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்


224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பெலகாவி மாவட்டத்தில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது “ வரவிருக்கும் தேர்தலில் பழைய கட்சி வெற்றி பெற்றால் கர்நாடகாவின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும். பாஜகவால் மட்டுமே புதிய கர்நாடகா என்பதை நோக்கி வழிநடத்த முடியும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : மோடி மீதான மோகத்தால் அமெரிக்க பணியை துறந்து கர்நடாக தேர்தலில் களம் காணும் இளம் வேட்பாளர் தீரஜ் முனிராஜ்!

காங்கிரஸ் தவறுதலாக ஆட்சிக்கு வந்தால், ஊழல் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும். இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு எம்எல்ஏவைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்ல, கர்நாடகாவின் எதிர்காலத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் ஒப்படைப்பதற்காகவே. கர்நாடகாவை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வருவதற்கான தேர்தல் இது” என்று தெரிவித்தார்.

இதே போல் பாகல்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஷா, இரண்டு லிங்காயத் தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் லக்ஷ்மண் சவடி - பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறுவது எதிர்க்கட்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று தெரிவித்தார்.

மேலும் "காங்கிரஸ் எப்போதும் லிங்காயத் சமூகத்தை அவமதித்து வருகிறது. மாநிலத்தில் தனது நீண்ட ஆட்சியில் இரண்டு லிங்காயத் முதல்வர்களை மட்டுமே கொடுத்து. எஸ் நிஜலிங்கப்பா மற்றும் வீரேந்திர பாட்டீல் - இருவரும் அவமானப்படுத்தப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்," என்று கூறினார். 

“மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை பயன்படுத்தி எடியூரப்பாவை வீழ்த்திய பிறகு, எங்கள் தலைவர்கள் சிலரின் உதவியுடன் நீங்கள் (காங்கிரஸ்) முன்னேற விரும்புகிறீர்கள். ஆனால் கர்நாடக மக்கள், குறிப்பாக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ‘கிட்டூர் கர்நாடகா’ பகுதியைச் சேர்ந்தவர்கள் இதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

முஸ்லீம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் மாநில அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாஜக தேசியத் தலைவர் ஆதரித்தார், பாஜக ஒருபோதும் "மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டில்" நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறினார். மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்ற காங்கிரஸின் நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்தார்.

“முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு திரும்பப் பெற்றால் யாருடைய இடஒதுக்கீடு குறையும்? ஒக்கலிகாக்கள் அல்லது லிங்காயத்துகள், தலித்துகள், பட்டியல் பழங்குடியினர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள்? ஆகிய வகுப்பினரின் இட ஒதுக்கீடு குறையுமா..” என்று கேள்வி எழுப்பினார்.

அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட 98 பேர் கொண்ட மத்திய பாஜக தலைவர்கள் குழு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னை ஐஐடி வழங்கும் 'அவுட் ஆஃப் திங்கிங்' இலவச படிப்பு.. இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

click me!