அமெரிக்காவில் படித்திருந்தாலும் சொந்த நாட்டிற்கு சேவை செய்வதே என் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் தொட்டபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் தீரஜ் முனிராஜ், 31 வயதே நிரம்பிய இவருக்கு கர்நாடக தேர்தலில் பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்துக்கட்சித் தலைவர்களும் சூறாவளிப் பிரச்சராம் மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் வேட்பளார்களையும் அறிவித்து வருகின்றனர்.
இந்த சட்டசபை தேர்தலில் பல புதிய முகங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பெங்களூரு மாவட்டம் தொட்டபல்லாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 60 ஆண்டு கால வரலாற்றில், தேசியக் கட்சியிலிருந்து மிக இளம் வயது வேட்பாளர் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி அதிகம் இருந்தபோதிலும், MS (Master in Science) முதுகலை படிப்பு முடித்த 31 வயது இளைஞரான தீரஜ் முனிராஜ்க்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. இவர், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்., பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பின்னணி இல்லாதவர்!
விவசாயப் பின்னணியில் இருந்து வந்தாலும், தொழில்துறையில் தனது சொந்தச் திறமை மூலம் சாதனை படைத்த முனிராஜின் மகன் தீரஜ் முனிராஜ், இந்தியா கலாச்சாரத்தில் மோகம் கொண்ட ஒரு உண்மையான தேசிய நோக்கம் கொண்டவர். அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அவருக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. சமூக சிந்தனையின் தாக்கம், மக்கள் நட்பு, கருத்துக்கள் மற்றும் தரமான மாற்றத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றால் தீரஜ் முனிராஜ் பொது வாழ்க்கையில் அடையாளம் காணப்படுகிறார்.
அமெரிக்க பணியை துறந்த தீரஜ்
பெங்களூரைச் சேர்ந்த தீரஜ் முனிராஜ், RV கல்லூரியில் BE பட்டப்படிப்பை முடித்த பிறகு, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். டெக்சாஸில் M.S பட்டப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு பெங்களூர் திரும்பி CBRE உள்ளிட்ட சில நிறுவனங்களில் சில நாட்கள் வேலை பார்த்தார். இளம் வயதிலேயே, துமக்கூர் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராகவும், பாஜகவின் முக்கிய மாவட்ட அழைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கொரோனா நெருக்கடியின் போது அஞ்சனாத்ரி அறக்கட்டளை மூலம் பல்வேறு சேவைகளை தீரஜ் செய்து வந்தார்.
மோடி மீதான மோகம்
பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்ட நம்பிக்கையாலும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின், ‘முதலில் நாடு’ என்ற கருத்து தனது கொள்கை நிலைப்பாட்டை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது என்றும், அரசியல் அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு உயர்ந்த இடத்தைக் காண ஆசைப்படுவதாக தீரஜ் தெரிவித்துள்ளார். அதற்கு பாஜக தான் சிறந்த தளம் என்றும் அவர் கூறுகிறார்.
நிப்பானியை பிடிக்கப்போவது யார்? காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி!
அரசியல் களம்
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் தொடர்பில் இருக்கும் தீரஜ் முனிராஜ், தொட்டபல்லாப்பூர் தொகுதியின் ஒவ்வொரு துடிப்பை அறிந்திருப்பதாகவும், இங்குள்ள விவசாயம், நெசவு, தொழிலாளர் வர்க்கத்தின் அவலங்கள் மற்றும் அவற்றின் தீர்வுகள் குறித்து தங்களுடைய சொந்த தொலைநோக்கு சிந்தனைகள் இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.
எனது மக்கள் சார்புடைய செயல்பாடுகளை கருத்தில் கொண்டு பாஜக எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் திருப்தியான வாழ்க்கை ஆகியவை அரசியல்வாதிகளின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். தொட்டபல்லாபூர் தொகுதியின் சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் களத்தில் இறங்கியுள்ளதாக அத்தொகுதி பாஜக வேட்பாளர் தீரஜ் முனிராஜ் தெரிவித்துள்ளார்.