பாஜக தொண்டாக இருப்பதில் பெருமிதம்.. யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்.. எடியூரப்பா ட்வீட்டால் பரபரப்பு.!

Published : Jul 22, 2021, 12:15 PM IST
பாஜக தொண்டாக இருப்பதில் பெருமிதம்.. யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்.. எடியூரப்பா ட்வீட்டால் பரபரப்பு.!

சுருக்கம்

பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் எவ்விதமான போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவான போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியாமல் போனது. கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவான போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியாமல் போனது. இதனால் அப்போது காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இருப்பினும், இந்த அரசு 2019ஆம் ஆண்டு கவிழ்ந்தது.

அதைத் தொடர்ந்து பாஜக தலைமையில் கர்நாடக அரசு உருவானது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகாவில் பாஜக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடியூராப்பாவிற்கு 75 வயது ஆகிவிட்டதால் பதவியிலிருந்து முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.

இந்நிலையில், எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அடுத்தடுத்து தலைவர்கள் சந்திப்பால் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், எடியூரப்பா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு ஒன்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளது அரசியல் பட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!