அண்ணாமலையை அசிங்கமாக பேசி, பாஜக கொடியை கிழிக்க முயற்சி.. கைதானவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிய கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2021, 12:04 PM IST
Highlights

பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் நாவலூர் பகுதியை சேர்ந்த பூபதி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் மற்றும் பாஜக வழக்கறிஞர் அணி மாநில தலைவர் பால்கனகராஜ் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். சென்னை பாடி புதுநகர் ஆவின் பால் பூத் அருகே கடந்த 19-ஆம் தேதி மதியம் காரில் தனது மகளுடன் பாஜக அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் காரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்க முற்பட்டு தகாத வார்த்தைகளில் பிரதமரையும், பாஜக மாநில தலைவரையும், இழிவாக பேசியதாகவும், கட்சி கொடியை கிழிக்க முயற்சித்ததாகவும்  ஜே. ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் நாவலூர் பகுதியை சேர்ந்த பூபதி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் மற்றும் பாஜக வழக்கறிஞர் அணி மாநில தலைவர் பால்கனகராஜ் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய சுமதி வெங்கடேசன், சாலையில் சென்றபோது திடீரென வந்த இரண்டு நபர்கள் தாக்க முயற்சித்து,

இழிவாக பேசியும், கட்டைகளை வைத்து தாக்க முற்பட்ட  நிலையில் அவர்கள் மீது சாதாரண வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு இருப்பதால், காவல் ஆணையரை சந்தித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் தொடர்ச்சியாக பாஜகவில் இருக்கும் மகளிர் அணியினரை தாக்கி வரும் செயல் குறித்தும் அதனை தடுப்பதற்காக பாஜக தலைவர் அளித்த அறிக்கையினை புகார் மனுவுடன் இணைத்து ஆணையர் இடத்தில் ஒப்படைத்துள்ளதாக சுமதி வெங்கடேசன் தெரிவித்தார்.
 

click me!