இப்படியே போச்சுனா சத்தியமா 3வது அலையை தடுக்க முடியாது.. அசால்டாக சுற்றும் மக்கள்.. அலறும் அதிகாரிகள்..

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2021, 11:31 AM IST
Highlights

சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக சிறப்பு மண்டல அமலாக்க குழுவினர் நடத்திய ஆய்வில் நேற்று ஒரே நாளில் 15 மண்டலங்களில் மொத்தம் 73,300 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதியில், கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிறப்பு அமலாக்க குழுவினர் நடத்திய ஆய்வில் மொத்தம் 73300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10400 ரூபாயும், அம்பத்தூர் மண்டலத்தில் 9 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில்,  2 வது அலை ஒய்ந்துவிட்டது என அசால்டாக மக்கள் கூட்டம் கூடிவருவது சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்துள்ளது. நிச்சயம் இது ஆபத்தில் கொண்டுபோய் விடும் என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். 
 

click me!