அமமுக அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றம்... டிடிவி.தினகரன் அறிவிப்பு..!

Published : Jul 22, 2021, 11:24 AM IST
அமமுக அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றம்... டிடிவி.தினகரன் அறிவிப்பு..!

சுருக்கம்

அமமுக ராமநாதபுரம் மாவட்டக் கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக கட்சி பணிகளை அந்த மாவட்டம் அமைப்பு ரீதியாக 2 ஆகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- அமமுக ராமநாதபுரம் மாவட்டக் கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

இதில், ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதிகளும், ராம நாதபுரம் மேற்கு மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடம்பெறும்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஜி.முனியசாமி (கட்சியின் அமைப்புச் செயலாளர்), ராமநாதபுரம் மேற்கு மாவட்டச்செயலாளராக எம்.முருகன் (முன்னாள் எம்.எல்.ஏ.) நியமிக்கப்படுகின் றனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?