M.R விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு.. கணக்கை தொடங்கிய திமுக. ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2021, 10:56 AM IST
Highlights

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா குடியிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தொடர் புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இல்லம் மற்றும் அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, கரூர் என தமிழகம் முழுவதும் அவரது வீடு அலுவலகம், மற்றும் அவருக்கு சொந்தமான சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு என 21 இடங்களில், 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா குடியிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று முறைகேடாக கையொப்பம் வழங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக வந்த தொடர் புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவர் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தொடர் புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இல்லம் மற்றும் அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என ஸ்டாலின் எச்சரித்து வந்த நிலையில், தற்போது இந்த சோதனை தொடங்கியிருப்பதாகவும், அடுத்தடுத்த சோதணை தொடரும் என்றும் கூறப்படுகிறது. 

 

click me!