கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய விஜய் வசந்த்... முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 17, 2021, 07:26 PM IST
கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய விஜய் வசந்த்... முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு...!

சுருக்கம்

அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். 

அரசியல் கட்சி தலைவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளனர். தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். 

அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி மட்டுமல்லாது தங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தையும் வழங்க உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சமும், ன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ரூ.10 கோடியும் கொரோனா நிவாரண நிதியாக் வழங்கியுள்ளனர். 

திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார், அஜித், சிவகார்த்திகேயேன், ஜெயம் ரவி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ஷங்கர் மற்றும் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் லட்சங்களை வாரி வழங்கி வருகின்றனர். தற்போது கன்னியாகுமரி மக்களவை எம்.பி.யும், நடிகருமான விஜய் வசந்த் கொரோனா நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜய் வசந்த் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!