கட்சியில் ஒருத்தர் இருக்கக்கூடாது... கமல்ஹாசனுக்கு பாடம் புகட்டத் தயாரான மகேந்திரன்..!

By Thiraviaraj RMFirst Published May 17, 2021, 7:03 PM IST
Highlights

கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மருத்துவர் மகேந்திரன். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவராக ஆண்டவருக்கு அடுத்த இடத்தில் கோலோச்சி வந்தார். 

கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மருத்துவர் மகேந்திரன். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவராக ஆண்டவருக்கு அடுத்த இடத்தில் கோலோச்சி வந்தார்.

 

கட்சி தொடங்கியது முதல் கமல்ஹாசனுடனேயே நெருங்கிய நண்பராக இருந்தார். கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு  மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனால் இவர் மீது  கட்சியின் மேலிடத்தில் நம்பகத்தன்மை அதிகரித்தது.

ஆனால், தற்போது நடந்து  முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கசப்புணர்வு அதிகமாகி,  கடைசியில் கட்சியை விட்டே சென்றுவிட்டார் மகேந்திரன்.  கட்சியை விட்டு  விலகினாலும், அவர் சும்மா இருக்கவில்லை. கோவை மாவட்டத்தில் பிற  சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நின்று போட்டியிட்ட  வேட்பாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியே வருமாறு பேசி வருகிறாராம். தன்னை பகைத்து கொண்டால் என்ன ஆகும் என்பதை கமல்ஹாசனுக்கு காட்டவே, கோவையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒருத்தர் கூட இருக்கக் கூடாது என்பதை மய்யமாக வைத்து  செயல்படுவதாக அதே கட்சியில் பேசிக்கொள்கிறார்கள். 

click me!