
நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று அமளிதுமளி ஆனது. ஜெ மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி மைத்ரேயன் சசிகலா புஷ்பா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா ஆதரவு எம்பி விஜிலா சத்யானந்த் அதகளம் செய்தார்.
இவர்களது உட்கட்சி சண்டையால் கூச்சல் களமாக மாறிப்போனது அவை.
அதிமுக இரு பிரிவினரிடையே எழுந்த உட்கட்சி மோதலுக்கிடையே சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரச்சனையை எழுப்பி அதற்கு நீதி கேட்டு உருப்படியான கேள்வி எழுப்பினார் மாநிலங்களவை திமுக எம்பி கனிமொழி.
சுட்டுகொல்லப்பட்ட மீனவர் ப்ரிட்ஜோவின் மரணத்துக்கு நீதிவேண்டும், இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லவில்லை என மறுக்கிறது அப்படியென்றால் மீனவரை சுட்டுகொன்றது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
உடனடியாக தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என மக்கள் பிரச்னையை பேசி ஸ்கோர் செய்தார் கனிமொழி.