Kanimozhi : ”நாங்க தமிழ்ல பேச அனுமதி கேக்கணுமே..!” கனிமொழியின் மாஸ் பேச்சு.. அதிர்ந்தது பார்லிமெண்ட்..

By Ganesh RamachandranFirst Published Dec 9, 2021, 2:50 PM IST
Highlights

பிரதமர் அறிவிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் மற்ற மொழி பேசுவோருக்கு உச்சரிக்கக் கூட முடியவில்லை என்றும், ஆங்கிலத்திலோ அல்லது பிராந்திய மொழிகளிலோ பெயர் வைக்க என்ன சிக்கல் என்றும் நகைச்சுவையுடன் தாக்கிப் பேசினார் கனிமொழி

”ஆத்ம நிர்பார் பாரத்” என்ற மத்திய அரசின் திட்டத்தின் பெயரை தனது மக்களவை பேச்சின் நடுவே சொல்வதற்கு சிரமப்பட்டார் கனிமொழி. உச்சரிக்க கஷ்டமான ஹிந்தி வார்த்தை என்பதால் அதை அவரால் முழுமையாக கூறமுடியவில்லை. ஆனாலும் இப்படி புரியாத மொழியில் பெயர் வைப்பதை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டிப் பேசி மாஸ் காட்டினார் கனிமொழி.

சமீபத்தில் நடைபெற்ற கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியா அளித்த Net Zero உள்ளிட்ட உறுதிமொழிகளைப் பற்றியும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்தும், மாநில அரசுகளுடன் மத்திய அரசு காலநிலை மாற்றத்தைக் குறித்து கலந்தாலோசிப்பதன் முக்கியத்துவத்தையும் பற்றி மக்களவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் கனிமொழி. அப்போது தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட பிரதமரின் “ஆத்ம நிர்பார் பாரத்” திட்டத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை சொல்லத் தொடங்கினார். ஆனால் அந்த ஹிந்தி வார்த்தையை உச்சரிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. அப்போது மற்ற வடநாட்டு உறுப்பினர்களும், சபாநாயகரும் திட்டத்தின் பெயரை சொல்லிக்கொடுக்க முயன்றனர். அப்போது கனிமொழி, ”இப்படி பல பிராந்திய மொழிகள் இருக்கும் நாட்டில் பெரும்பாலானோர் ஹிந்தி தெரியாதவர்களாக இருக்கும் போது ஆங்கிலத்திலோ அல்லது பிராந்திய மொழிகளிலோ பெயர் வைக்கக்கூடாதா..?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது ‘உங்களுக்கு புரியாமல் போனால் நாங்கள் என்ன செய்வது?’ என்ற தொனியில் உறுப்பினர் ஒருவர் பதில் கூற, “சரி அப்போ இனி நான் தமிழ்ல பேசறேன் உங்களுக்கு புரியுதா பாருங்க” என்று பதிலடி கொடுத்தார் கனிமொழி. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்படி போடு pic.twitter.com/x6pcfI5g6O

— RadhakrishnanRK (@RKRadhakrishn)

ஹிந்தியில் பேச நாடாளுமன்றத்தில் எந்தத் தடையும் இல்லாத போது, தமிழ் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழிகளில் பேச மட்டும் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தி அசத்தினார் கனிமொழி. மற்ற மொழியில் பேசும் போது மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்பாடு செய்ய ஏதுவாகவே முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டாலும், ஹிந்தியில் சேசும் உறுப்பினர்கள் பேச்சை மற்ற மொழிக்காரர்களுக்கு மொழிபெயர்க்க எந்த ஏற்பாடும் நாடாளுமன்றத்தில் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். என்றால், ஹிந்திக்கு மட்டும் எதற்கு இந்த தனிச் சலுகை என்ற கேள்வியை கனிமொழியின் இந்த பேச்சு கோடிட்டுக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் கனிமொழி...!

click me!