முதலமைச்சரை விமர்சிக்காதீர்கள்..! பாராட்டி தள்ளிய நீதிபதி..!

By Thanalakshmi VFirst Published Dec 9, 2021, 2:18 PM IST
Highlights

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றி வருகிறார் என்று மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார்
 

ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் என்றும் அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறு பேசுவதை தவிர்க்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள் என்றும் சாட்டை துரைமுருகன் தரப்புக்கு நீதிபதி கேள்வியெழுப்பினார். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி சாட்டை துரைமுருகன் ஒருவார்த்தை பேசியிருந்தாலும் ஜாமின் ரத்து செய்யப்படும் எச்சரித்துள்ளார். 

சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தமிழக அரசு மீதும் அவதூறாக பேசியதாக அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்த சாட்டை துரைமுருகன், கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை உடைத்து கற்கள் உள்ளிட்டவற்றை சட்ட விரோதமாகக் கேரள மாநிலத்துக்கு கடத்துவதைக் கண்டித்து, அக்டோபர் 10ஆம் தேதி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அப்போது பேசிய சாட்டை துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறப்பு குறித்து மிகவும் இழிவாகப் பேசினார். மேலும் ராஜீவ்காந்திக்கு நடந்தது நியாபகம் இருக்கட்டும் என்பதை சுட்டிக்காட்டி மறைமுக மிரட்டல் விடுத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாட்டை முருகன் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் துரைமுருகன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தார். நீதிபதி முரளிசங்கர் இரு வழக்குகளில் துரைமுருகனுக்கு ஜாமின் வழங்கினார். 

வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று இதுபோன்ற சம்பவங்களில் மனுதாரர் மீண்டும் ஈடுபட்டால் உடனடியாக ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார் அதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனிடையே சாட்டை துரைமுருகனுக்குக் கொடுத்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய தமிழக அரசின் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார். முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழ்நாடு அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள் என்றும் சாட்டை துரைமுருகன் தரப்புக்கு நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் சாட்டை துரைமுருகன் அவதூறாகப் பேசியதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

click me!