Bipin Rawat: சீனாவை எதிர்த்த இரண்டு தளபதிகளுக்கும் நேர்ந்த கதி.. சர்வதேச அரங்கில் வலுக்கும் சந்தேகம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2021, 2:14 PM IST
Highlights

சீனா இந்திய எல்லையில் அத்துமீறி படையை குவித்த நேரத்தில் பிபினும் இந்திய படைகளையும் போர்த்தளவாடங்களையும் கால்வான் பள்ளத்தாக்கை நோக்கி நகர்த்த உத்தவிட்டார். பிபின் தலைமையிலான இந்திய ராணுவத்தில் வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷ நடவடிக்கைகளை பார்த்த சீனப்படை வாலை சுருட்டிக் கொண்டு பின்வாங்கியது.

இந்தியாவின் பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவதின் மரணம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம்  இதுவரையில் தெரியவில்லை. கருப்பு பெட்டியை ஆராய்ந்த பின்னரே உண்மை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் மரணம் நாட்டிற்கும் நாட்டில் பாதுகாப்புக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது. இது ஒருபுறமிருக்க இந்த விமான விபத்து தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா? அல்லது வெளிநாட்டு சதிகள் உள்ளதா பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பிபின் ராவத் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய படைத் தளபதியாவார். அவரின் இந்த ஹெலிகாப்டர் விபத்து, அவரின் இந்த ஹெலிகாப்டர் விபத்து சீனாவையும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்த தைவான் நாட்டு ராணுவ தளபதிக்கு ஏற்பட்ட விமான விபத்து போலவே மர்மமாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் தமிழ்நாட்டில் நடந்த பயங்கர ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்தார். இந்த விபத்தில் ஜெனரல் ராவத் தவிர மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஜெனரல் ராவத்தின் மனைவியும் அடக்கம். பல நிபுணர்கள் மற்றும் நெட்டீசன்கள் இந்த  சோக சம்பவத்தை தைவானின் சீனவை கடுமையாக  எதிர்த்து வந்த இராணுவத் தளபதியின் ஹெலிகாப்டர் விபத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர். தைவானில் நடந்த விபத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போம்... 

ஜனவரி 2020 இல், தைவானின் இராணுவத் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார், அப்போது முழு நாடும் புதிய ஜனாதிபதி தேர்தலில் கவனம் செலுத்தியிருந்தது. அந்த பயங்கர விபத்தில் பாதுகாப்பு தலைமை தளபதி ஷென்-யி- மிங் மற்றும் 7 மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர்.  ஜெனரல் மிங் நாட்டின் வடகிழக்கில் உள்ள யிலான் கவுண்டிக்கு சாதாரண விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது வழியில் அவரது ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்தது. அந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பினர், 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்குப் பிறகு, தைவானில் தேர்தல் நடத்தப்பட்டு, சீனாவின் பரம எதிரியான அதிபர் சாய் இங் வென் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நவீன மற்றும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களில் ஒன்றாகக் கருதப்படும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் ஜெனரல் மிங் பயணித்து விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடதக்கது. 

தகவல்களின்படி, ஜெனரல் மிங்கின் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட 15 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து காணாமல் போனது. இதேபோல்தான் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்தும் நிகழ்ந்துள்ளது. இது பல வகையில் பேசுபொருளாக மாறியுள்ளது. தேவானில் சீனாவின் ஆதிக்கத்தை அந்த நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. ஜெனரல் மிங் சீனாவை தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், சீனாவின் மிரட்டல்களுக்கு அஞ்சாத படைத்தளபதியாக சீனாவுக்கு சவால் கொடுக்கும் படைத்தளபதியாக இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்தது. இதேபோல்தான் இந்தியாவின் ஆனுபவம் மிக்க படைத்தளபதியும், ராணுவ வியூகத்தை கற்றுத் தேர்ந்த பிபின் ராவத் சீனாவை தனது வியூகத்தால் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வைத்தார்.

சீனா இந்திய எல்லையில் அத்துமீறி படையை குவித்த நேரத்தில் பிபினும் இந்திய படைகளையும் போர்த்தளவாடங்களையும் கால்வான் பள்ளத்தாக்கை நோக்கி நகர்த்த உத்தவிட்டார். பிபின் தலைமையிலான இந்திய ராணுவத்தில் வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷ நடவடிக்கைகளை பார்த்த சீனப்படை வாலை சுருட்டிக் கொண்டு பின்வாங்கியது. எனவே சீனா ராணுவத்திற்கு எதிராக பிபின் எடுத்த துணிச்சலான முடிவே சீனா பின்வாங்க காரசமாக இருந்தது. பிபின் ராவத் எதிரிநாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு சிம்ம செப்பனமாகவே இருந்து வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில்தான் 130 கோடி மக்களின் பாதுகாப்பு பிதாமகன் பிபின் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்துள்ளது. இது பல சந்தேகங்களையும் ,கேள்விகளையும் எழுப்பியுள்ளது.  

கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பொழிவு அதிகமா இருந்து வருகிறது, விபத்து நடந்த அப்பகுதியில் மோசமான வானிலை நிலவுவதாகவும் மீட்புக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள இந்தியாவின் பாதுகாப்பு நிபுணர் பிரம்மா செலானி, ஜெனரல் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்தை தைவான் ராணுவத் தளபதியின் ஹெலிகாப்டர் விபத்துடன் ஒப்பிட்டுள்ளார். சீனாவுடனான 20 மாத கால எல்லைப் பதட்டங்கள், இமயமலைப் பகுதியில் போர் சூழ்லுக்கு வழிவகுத்துள்ள நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் அடங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்றும். எளிதில் கடந்து செல்ல கூடியது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.  ஒரு சோகமான மரணத்திற்கு இதைவிட மோசமான நேரத்தை நான் பெற்றிருக்க முடியாது என்றும் செலானி குறிப்பிட்டுள்ளார்,

'ஜெனரல் ராவத் ஏற்கனவே ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்புயுள்ளார். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இதேபோல்தான் சீனாவை கடுமையாக எதிர்த்து வந்த தைவானின் ஜெனரல் ஸ்டாஃப் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார். அதில் ஷென் யி-மிங் மற்றும் இரண்டு முக்கிய ஜெனரல்கள் உட்பட ஏழு பேர் அடங்குவர். ஒவ்வொரு ஹெலிகாப்டர் விபத்திலும் சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான கடுமையான எதிர்விணையாற்றிய முக்கிய அதிகாரிகள் இறப்பது சந்தேகத்தே ஏற்படுத்தியுள்ளது. இதனால் விசாரணையில் பல கோணங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு விபத்துக்களிலும் விசித்திரமான ஒற்றுமை உள்ளது என்றும். ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஏதேனும் வெளிநாட்டு சதி இருந்ததாக வெறுமனே சந்தேகப்பதில் அர்த்தமில்லை என்றும். எப்படியிருந்தாலும், ஒவ்வொரு விபத்தும் முக்கியமான உள் கேள்விகளை எழுப்பியுள்ளன என்றும் பாதுகாப்பு வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். 
 

click me!