நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பொதுகூட்டங்கள் நடத்தி வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.மற்றொரு பக்கம் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி குக்கிராமங்களுக்கெல்லாம் நேரடியாக சென்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த இரண்டு பேருக்கும் கூடுதலாக கை கொடுக்கும் வகையில், தூத்துக்குடி வேட்பாளராக இருந்தாலும் தானும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வேன் எனக்கூறி கனிமொழியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்
undefined
கனிமொழி பிரச்சாரம்
அந்த வகையில், வருகின்ற 28ஆம் தேதி கரூர் ஈரோடு ஆகிய தொகுதிகளிலும், 29ஆம் தேதி கோவை.பொள்ளாச்சி தொகுதிகளிலும்,1ஆம் தேதி திருநெல்வேலி,தென்காசி தொகுதிகளும் 2ஆம் தேதி கன்னியாகுமரி தொகுதியிலும், 4ஆம் தேதி மதுரை,தேனி தொகுதியிலும், 8ஆம் தேதி சென்னை தெற்கு தொகுதியிலும் கனிமொழி தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்